இது சிறப்பான வெற்றி.. ஆனால்: அதிருப்தியை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா
இந்திய அணி இவ்வருட உலககோப்பைக்கு தயாராகும் விதமாக பேட்டிங் வரிசையை உறுதி செய்ய கடைசி மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டியை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லாமல் விளையாடினர்.
இப்போட்டிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டு வெற்றியை தேடித்தந்தார்.
இந்த போட்டியை வென்றதன் மூலம் இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.
இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை கைப்பற்றியதுடன் அடுத்து ஐந்து இருபது ஓவர் போட்டிகளை விளையாடவுள்ளது.
இந்த மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுபன் கில் 85 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இரண்டாவதாக ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஷரதல் தாகூர் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இஷான் கிஷன் தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்த போட்டி முடிந்த பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா, "நாங்கள் விளையாடியதிலேயே இது ஒரு நல்ல மைதானம். நாங்கள் அடுத்த முறை வரும்போது ஏற்பாடுகள் இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.
பயணம் போன்ற சில விசயங்களில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் கொஞ்சம் கவனம் செலுத்தி, அடுத்த முறை எந்த பிரச்சனையும் இல்லாமல் பார்த்துக்கொள்ளும் என நம்புகிறேன்.
நாங்கள் சொகுசான எதையும் கேட்கவில்லை, ஆனால் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும்" என அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |