ஒரே ஓவரில் 34 ஓட்டங்கள் - அதிரடி சதம் விளாசிய ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா ஒரே ஓவரில் 34 ஓட்டங்கள் விளாசியுள்ளார்.
ஒரே ஓவரில் 34 ஓட்டங்கள்
விஜய் ஹசாரே கிண்ண தொடரில், இன்று நடைபெற்ற போட்டியில் பரோடா மற்றும் விதர்பா அணிகள் மோதியது.
நாணய சுழற்சியில் வென்ற விதர்பா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய பரோடா அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு, 293 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகபட்சமாக, ஹர்திக் பாண்டியா 92 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 11 சிக்ஸர்கள் உட்பட 133 ஓட்டங்கள் குவித்தார்.
6⃣,6⃣,6⃣,6⃣,6⃣,4⃣ 🔥
— BCCI Domestic (@BCCIdomestic) January 3, 2026
A maiden List A 💯 brought up in some style 🔥
Hardik Pandya was on 66 off 62 balls against Vidarbha...and then he went berserk in the 39th over to complete his 100, smashing five sixes and a four 💪
Scorecard ▶️ https://t.co/MFFOqaBuhP#VijayHazareTrophy… pic.twitter.com/pQwvwnI7lb
இதில், பார்த்த் ரேகாடே வீசிய 39வது ஓவரில், முதல் 5 பந்துகளையும் சிக்ஸர் விளாசியதோடு, 6 வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி, ஒரே ஓவரில் 34 ஓட்டங்கள் எடுத்து அதிரடி காட்டினார்.
விதர்பா அபார வெற்றி
இதனையடுத்து, 294 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய விதர்பா அணி, 41.4 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 296 ஓட்டங்கள் எடுத்தது.

இதன் மூலம்,விதர்பா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக, அமன் மொகதே 150 ஓட்டங்கள் எடுத்தார். அதர்வ தைடே மற்றும் துருவ் ஷோரே தலா 65 ஓட்டங்கள் எடுத்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |