அன்று ஸ்ட்ரெட்சரில், இன்று ஆட்டநாயகன்! வைரலாகும் ஹர்த்திக் பாண்டியா புகைப்படம்
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்டியாவின் புகைப்படம்
இணையத்தில் வைரல் பின்னடைவை விட திரும்பி வருவது மிகவும் பெரியது என ஹர்த்திக் பாண்டியா பதிவு
கடந்த ஆசியக் கோப்பையில் காயம் காரணமாக வெளியேறிய ஹர்த்திக் பாண்டியா, இந்த ஆண்டு ஆட்டநாயகனாக மாறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
2022 ஆசியக் கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில், இந்திய அணி ஹர்த்திக் பாண்டியாவின் அதிரடியான ஆட்டத்தினால் பாகிஸ்தானை வீழ்த்தியது. 17 பந்துகளில் 33 ஓட்டங்கள் விளாசிய ஹர்த்திக், பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலம் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
PC: Twitter
கடந்த 2018ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியில், ஹர்த்திக் பாண்டியா பந்துவீசும்போது காயம் ஏற்பட்டதால் ஸ்ட்ரெட்ச்சரில் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அதே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிக்ஸர் விளாசி இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்துள்ளார்.
Associated Press
இதுதொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஹர்த்திக் பாண்டியா, பின்னடைவை விட திரும்பி வருவது மிகவும் பெரியது என குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
The comeback is greater than the setback ?? pic.twitter.com/KlnD4GZ4ZO
— hardik pandya (@hardikpandya7) August 29, 2022