கபில்தேவ் பேட்டியால் இந்திய அணியில் இருந்து காணாமல் போகவுள்ள வீரர்! யார் அவர் தெரியுமா?
இந்திய அணியின் முன்னாள் வீரரான கபில்தேவ்வின் பேட்டியால், இள்ம வீரர் ஒருவர் வாய்ப்பிளக்கும் நிலைக்கு தள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தின் தோல்விக்கு பின் இந்திய பல கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக இப்போட்டியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது.
தோல்விக்கு பின் கோஹ்லி, வேகப்பந்து வீச்சில் ஆல் ரவுண்டர் இல்லாதது அணியில் மிகப் பெரிய குறையாக உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான கபில்தேவ், எங்கள் காலத்தில் எல்லாம் வேகப்பந்து வீச்சாளர்கள் எத்தனை ஓவர்கள் தொடர்ச்சியாக பந்து வீசினாலும் அவ்வளவாக சோர்வடைவது இல்லை.
ஆனால் தற்போதைய வேகப்பந்து வீச்சாளர்கள் 4 ஓவர்கள் வீசினாலே சோர்வாகி விடுகின்றனர் என்று வெளிப்படையாக பாண்டியா மீதான தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் அவர், வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம் என்றும் வீரர்கள் மீண்டு வந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்றும் அவரை மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார்.
இதனால், அடிக்கடி காயத்தால் அவதிப்படும் பாண்ட்யாவிற்கு பதில், ஷர்துல் தாகூர், விஜய் ஷங்கர் அல்லது சிவம் துபே ஆகியோரை தயார் செய்து ஆல்ரவுண்டர் வேகப்பந்து வீச்சாளராக விளையாட வைக்கலாம் என்று இந்திய நிர்வாகம் நினைத்த் வருகிறதாகம்.
இதனால், இனி இந்திய டெஸ்ட் அணியின் பாண்ட்யாவிற்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது.