நட்சத்திர வீரரை கழட்டி விட இருக்கும் மும்பை அணி! யார் யாரை தக்க வைக்கப்படுவார்கள்? கசிந்த தகவல்
ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணியான மும்பை இந்தியான்ஸ் அணி எந்தெந்த வீரர்களை தக்க வைக்கப்போகிறது என்ற விவரம் தெரியவந்துள்ளது.
புதிய இரண்டு அணிகளுக்கான ஏலம் சமீபத்தில் முடிந்த நிலையில், தற்போது புதிய தக்கவைப்பு விதிகள் வெளியாகியுள்ளது.
புதிய தக்கவைப்பு விதிகளின் படி, பழைய அணிகள் 4 (3 இந்திய வீரர்களை, 1 வெளிநாட்டு வீரரை) அல்லது (இரண்டு இந்திய வீரர்களை, 2 வெளிநாட்டு வீரர்களை) தக்கவைத்துக்கொள்ளலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மும்பை அணி அதன் 3 தூண்களான ரோகித், பொலார்ட் மற்றும் பும்ரா ஆகியோரை தக்கவைக்க உள்ளதாக மூத்த ஐபிஎல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதேசமயம், நட்சத்திர வீரரான ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி கழட்டி விட உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி தக்க வைக்க 10% வாய்ப்பே உள்ளது. அவர் டி20 உலகக் கோப்பையில் பட்டையை கிளப்பினால் மும்பை அணி ஹரிதிக்கை கழட்டி விடுவதற்கான வாய்ப்பு குறைவு தான்.
அதேசமயம், ஒருவேளை ஹர்திக் ஏலத்தில் விடப்பட்டு மும்பை அணியின் பட்ஜெட்டுக்குள் வந்தால் அவரை மீண்டும் அந்த அணியே வாங்கிவிடும் என மூத்த ஐபிஎல் அதிகாரி தெரிவித்துள்ளார்.