வரலாற்றை மாற்ற திட்டமிடும் ஹரி-மேகன் தம்பதி! இந்தமுறை ஆசை நிறைவேறுமா?
பிரித்தானிய இளவரசர் ஹரி-மேகன் மார்கல் தம்பதி தங்கள் இரண்டாவது குழந்தையை அமெரிக்காவில் தங்கள் வீட்டிலேயே பிரசவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரி மற்றும் மேகன் மார்கல் தம்பதி கடந்த ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Montecito பகுதியில் 14.5 மில்லியன் டொலர் மதிப்பில் மிகப்பெரிய வீட்டை வாங்கினர்.
அவர்களுக்கு பிறக்கவுள்ள இரண்டாவது குழந்தையை அந்த வீட்டிலேயே பிரசவிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அப்படி பிறந்தால், அந்த குழந்தை அமெரிக்காவில் பிறந்த முதல் பிரித்தானிய அரச வாரிசாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த Oprah Winfrey உடனான பரபரப்பு நேர்காணல், கடந்த மாதம் ஹரி மற்றும் மேகன் தம்பதி தங்களுக்கு இரண்டாவதாக பிறக்கவுள்ள குழ்நதை பெண் குழந்தை என அறிவித்தனர்.
வரும் கோடைகாலத்தில் அந்த குழந்தை பிறக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
முன்னதாக, இந்த தம்பதியின் முதல் குழைந்தையான Archie-ஐ, பிரித்தானியாவில் அவர்கள் தங்கியிருந்த Frogmore Cottage வீட்டில் பிரசவிக்க ஆசைப்பட்டனர்.
ஆனால், இறுதியில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2019, மே 6-ஆம் திகதி மோகனின் முதல் பிரசவம் நடந்தது.
இந்த முறை திட்டமிட்டபடி அவர்களது ஆசை நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
