மகாராணியார் குறித்து ஹரி கூறிய பொய்... தற்போது வெளியாகியுள்ள உண்மை: மகிழ்ச்சியில் அரண்மனை ஊழியர்கள்
மகாராணியாரின் செல்லப்பெயரை, அவரது அனுமதியை பெற்றே தங்கள் மகளுக்கு வைத்ததாக ஹரி மேகன் தம்பதியர் கூறியிருந்த நிலையில், அது உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது.
மன்னரை குறித்து எழுதப்பட்டுள்ள புதிய புத்தகம்
ராஜ குடும்ப எழுத்தாளரான Robert Hardman என்பவர், மன்னர் சார்லசின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த புத்தகத்திலிருந்து, மகாராணியாரின் செல்லப்பெயரை, அவரது அனுமதியை பெற்றே தங்கள் மகளுக்கு வைத்ததாக ஹரி மேகன் தம்பதியர் கூறிய விடயத்தில் உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது.
உண்மையில், தன் செல்லப்பெயரை ஹரி மேகன் தம்பதியர் தங்கள் மகளுக்கு வைத்தது தெரிந்ததும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மகாராணியார் ஆத்திரம் அடைந்தாராம்.
Getty images
எனக்கென்று சொந்தமாக மாளிகைகள் இல்லை, எனக்கென்று ஓவியங்கள் இல்லை, எனக்கென சொந்தமாக இருந்தது என் பெயர் மட்டும்தான், அதையும் அவர்கள் எடுத்துக்கொண்டார்கள் என்று கூறி, கடும் கோபமடைந்தாராம் மகாராணி இரண்டாம் எலிசபெத்.
விடயம் என்னவென்றால், மகாராணியாரின் செல்லப்பெயர் லிலிபெட் என்பதாகும், அவரது தந்தைக்குப் பிறகு, மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப் மட்டும்தான் தன்னை அந்தப் பெயரால் அழைப்பார் என்பதால், மகாராணியார் லிலிபெட் என்ற தனது செல்லப்பெயருக்கு சென்டிமெண்ட் பார்ப்பாராம்.
ஆகவேதான், அந்தப் பெயரை ஹரி மேகன் தம்பதியர் தங்கள் மகளுக்கு வைத்ததுடன், தன்னைக் கேட்டுத்தான் அந்த பெயரை வைத்ததாக பொய்யும் சொல்ல, மகாராணியார் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாராம்.
உற்சாகத்தில் கொண்டாகும் அரண்மனை ஊழியர்கள்
ஹரி மேகன் தங்கள் மகளுக்கு தன் பெயரை வைத்ததால் அவர் கோபமடைந்தார் என்னும் செய்தி தெரியவந்ததைத் தொடர்ந்து, அரண்மனை ஊழியர்கள் தங்கள் மகிழ்ச்சியை உற்சாகத்தில் கொண்டாடி வருகிறார்களாம்.
Getty images
உண்மை வெளிவந்ததில் தங்களுக்கு மகிழ்ச்சி என்று கூறும் அரண்மனை ஊழியர்களில் ஒருவர், ஹரியும் மேகனும் தாங்களாகவே ஒரு கதை விட்டார்கள், அது அப்போதும் எடுபடவில்லை, இப்போதும் எடுபடவில்லை என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |