இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் - சற்று முன்னர் பதவியேற்ற ஹரிணி அமரசூரிய
இலங்கையின் புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய சற்று முன்னர் பதவியேற்றுள்ளார்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
அதன்படி, இலங்கை வரலாற்றில் மூன்றாவது பெண் பிரதமர் இவர் ஆவார்.
2020ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பாக ஹரினி நாடாளுமன்றத்திற்குள் உள்நுழைந்தார்.
மேலும், இவர் இளைஞர் வேலையின்மை, பாலின சமத்துவமின்மை, சிறுவர் பாதுகாப்பு மற்றும் இலங்கையின் கல்வி முறைமையில் உள்ள திறமையின்மை போன்ற முக்கிய பிரச்சினைகள் பற்றி ஆய்வுகளை செய்து அவை தொடர்பில் குரல் கொடுத்து அரசியலில் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |