முதல் சதம் அடித்த ஹர்லீன் தியோல்! சூறாவளி ஆட்டத்தால் மிரண்ட வெஸ்ட் இண்டீஸ்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் சதம் விளாசினார்.
வதோதராவின் கோடம்பி மைதானத்தில் மகளிர் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்தது.
ஸ்மிருதி மந்தனா 53 ஓட்டங்களிலும், பிரதிகா ராவல் 76 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஹர்மன்பிரீத் கவுர் 18 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
Harleen Deol looks in full mood as she brings up her fifty 🔥
— JioCinema (@JioCinema) December 24, 2024
Keep watching #INDvWI, LIVE NOW on #JioCinema & #Sports18 👈#JioCinemaSports pic.twitter.com/eN22pZhgoj
நிலைத்து நின்று ஆடிய ஹர்லீன் தியோல் (Harleen Deol) மேற்கிந்திய தீவுகளுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தார்.
மறுமுனையில் ஜெமிமா ரோட்ரிகஸும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அரைசதம் கடந்த ஹர்லீன் தியோல் 98 பந்துகளில் பவுண்டரி அடித்து முதல் சதம் கடந்தார். அவரது ஸ்கோரில் 13 பவுண்டரிகள் அடங்கும்.
MAIDEN INTERNATIONAL CENTURY FOR HARLEEN DEOL! 🇮🇳#INDvWI pic.twitter.com/NrtyOLQrLx
— Women’s CricZone (@WomensCricZone) December 24, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |