பவுண்டரில் அசத்தல் கேட்ச் பிடித்து மிரள வைத்த இந்திய வீராங்கனை! மனம் திறந்து பாராட்டிய சச்சின்
இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய வீராங்கனை பவுண்டரியில் பறந்து அசத்தலாக கேட்ச் பிடித்ததை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என இழந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டியில் நேற்று Northampton மைதானத்தில் நடந்தது.
முதலில துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து பெண்கள் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்கள் எடுத்தது. 178 ஓட்டங்கள் வெற்றி என இந்திய பெண்கள் அணி களமிறங்கியது.
இந்திய அணி 8.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 54 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.
இதனையடுத்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 18 ஓட்டங்களில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இங்கிலாந்து இன்னிங்கஸின் போது 18வது ஓவரின் 5வது பந்தை இந்திய பந்துவீச்சாளர் Shikha Pandey வீச துடுப்பாடிய Amy jones பந்தை பவுண்டரியை நோக்கி பறக்கவிட்டார்.
பவுண்டரிக்கு அருகே பீல்டிங் செய்த harleen deol, பந்தை தட்டிவிட்டி பவுண்டரி கோட்டை தாண்டி வெளியே சென்று பின் மீண்டும் மைதானத்திற்குள் பறந்து அசத்தலாக பந்தை கேட்ச் பிடித்து மிரளவைத்தார்.
That was a brilliant catch @imharleenDeol. Definitely the catch of the year for me!pic.twitter.com/pDUcVeOVN8
— Sachin Tendulkar (@sachin_rt) July 10, 2021
harleen deol கேட்சை இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பாராட்டியுள்ளது.
அற்புதமான கேட்ச்! உண்மையில் எனக்கு இது இந்த வருடத்தின் சிறந்த கேட்ச் என சச்சின் பாராட்டியுள்ளார்.