25 பந்தில் 61 ரன்! WPLயில் ருத்ர தாண்டவமாடியும் வீண்..மும்பை இந்தியன்ஸ் வெற்றி
மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஹர்மன்பிரீத் சரவெடி
WPL தொடரின் 19வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹேலே மேத்யூஸ் 27 (22) ஓட்டங்களில் வெளியேற நட் சிவர் பிரண்ட் 38 (31) ஓட்டங்கள் விளாசினார்.
அணித்தலைவர் ஹர்மன்பிரீத் (Harmanpreet) பவுண்டரிகளை விரட்டி, 33 பந்துகளில் 54 ஓட்டங்கள் குவித்தார்.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 179 ஓட்டங்கள் எடுத்தது. தனுஜா, கஷ்வீ, பிரியா மிஸ்ரா மற்றும் கார்ட்னர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆடியகுஜராத் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீராங்கனைகள் சொதப்ப, ஹர்லீன் தியோல் 24 (17) ஓட்டங்கள் எடுத்தார். அணித்தலைவர் கார்ட்னர் டக்அவுட் ஆக, லிட்ச்ஃபீல்டு 22 (16) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பார்த்தி ஃபுல்மலி ருத்ர தாண்டவம்
குஜராத் அணி 92 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் என தத்தளிக்க, பார்த்தி ஃபுல்மலி (Bharti Fulmali) ருத்ர தாண்டவமாடினார்.
சிக்ஸர், பவுண்டரிகள் என பறக்கவிட்ட அவர் அதிரடி அரைசதம் விளாசினார். அவர் 25 பந்துகளில் 4 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் விளாசிய நிலையில் அமெலியா கெர் ஓவரில் அவுட் ஆனார்.
கடைசி ஓவரில் குஜராத் அணிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், 3 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |