ஸ்மிரிதி மந்தனா டக்அவுட்: சதம் விளாசிய ஹர்மன்பிரீத் கவுர்
Harmanpreet kaur 8th odi century vs zimbabwe: ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் சதம் விளாசினார்.
வதோதாராவில் நடந்து வரும் ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் ஹர்மன்பிரீத் கவுர் 8வது சதம் அடித்தார்.
ஸ்மிரிதி மந்தனா டக்அவுட்
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி வதோராவில் நடந்து வருகிறது.
முதலில் துடுப்பாட்டத்தைத் தொடங்கிய இந்திய அணியில் ஸ்மிரிதி மந்தனா டக்அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த ஷபாலி வெர்மா 8 பந்துகளில் 8 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சிபந்தா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஹர்மன்பிரீத் கவுர் சதம்
எனினும் பிரதிகா ராவல் அதிரடியாக ஆடி 61 ஓட்டங்கள் குவித்தார். தேஜல் ஹஸப்னிஸ் 3 ஓட்டங்களில் வெளியேற, ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் தீப்தி ஷர்மா இருவரும் கூட்டணி அமைத்தனர்.
இந்தக் கூட்டணி 100 ஓட்டங்கள் குவிக்க, ஹர்மன்பிரீத் கவுர் (Harmanpreet Kaur) தனது 8வது ஒருநாள் சதத்தினை பதிவு செய்தார்.
121 பந்துகளை எதிர்கொண்ட ஹர்மன்ப்ரீத் கவுர் 15 பவுண்டரிகளுடன் 126 ஓட்டங்கள் குவித்தார்.
