சிக்ஸர்களை பறக்க விட்ட இந்திய கேப்டன்! 143 ஓட்டங்கள் விளாசல்
ஹர்மன்ப்ரீத் கவுரின் சதத்தில் 4 சிக்ஸர்கள், 18 பவுண்டரிகள் அடங்கும்
போட்டியின் சிறந்த வீராங்கனை விருதை ஹர்மன்ப்ரீத் கவுர் பெற்றார்
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி கேப்டன் 143 ஓட்டங்கள் விளாசினார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி செயின்ட் லாரன்ஸ் மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ஓட்டங்கள் குவித்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 111 பந்துகளில் 143 ஓட்டங்கள் விளாசினார். அவர் கடைசி 11 பந்துகளில் சிக்ஸர்களை பறக்கவிட்டு 43 ஓட்டங்கள் குவித்தார்.
Andrew Boyers/Action Images/Reuters
ஹர்லீன் தியோல் 58 ஓட்டங்களும், மந்தனா 40 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 44.2 ஓவர்களில் 245 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
அதிகபட்சமாக வையாட் 65 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளையும், தயாளன் ஹேமலதா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Reuters