4 ஓட்டங்களில் தவறிய வெற்றி: உலகக்கிண்ணத்தில் ஹாட்ரிக் தோல்வி..இந்திய கேப்டன் கூறிய காரணம்
நாங்கள் தோல்வியுற்றாலும் உண்மையில் நல்ல கிரிக்கெட்டை ஆடினோம் என இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்தார்.
ஹீதர் நைட் சதம்
நேற்று நடந்த மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதின.
முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 288 ஓட்டங்கள் குவித்தது.
ஹீதர் நைட் 91 பந்துகளில் 1 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 109 ஓட்டங்கள் விளாசினார். தீப்தி ஷர்மா 4 விக்கெட்டுகளும், ஸ்ரீ சரணி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 284 ஓட்டங்கள் எடுத்ததால், இங்கிலாந்து 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது உலகக்கிண்ணத்தில் இந்திய அணியின் ஹாட்ரிக் தோல்வி ஆகும்.
போட்டிக்கு பின் பேசிய இந்திய அணித்தலைவர் ஹர்மன்பிரீத் கவுர், "ஸ்ம்ரிதியின் விக்கெட் எங்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று நான் நினைக்கிறேன், இன்னும் எங்களிடம் அதிகமான துடுப்பாட்ட வீராங்கனைகள் இருந்தனர் என்று நான் நினைக்கிறேன்.
விடயங்கள் எப்படி எதிர் திசையில் சென்றன என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் பெருமை இங்கிலாந்துக்கே சேரும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |