மகளிர் ஐபிஎல்லில் இறுதிவரை போராடிய தமிழக வீராங்கனை! ருத்ர தாண்டவம் ஆடிய ஹர்மன்பிரீத்
மகளிர் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
அதிரடியில் மிரட்டிய ஹர்மன்பிரீத்
நேவி மும்பையில் நடந்த இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணியில் சிக்ஸர்களை பறக்கவிட்ட ஹேலே மேத்யூஸ் 31 பந்துகளில் (4 சிக்ஸர், 3 பவுண்டரிகள்) 47 ஓட்டங்கள் விளாசினார்.
மறுமுனையில் ருத்ர தாண்டவம் ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 பந்துகளில் 65 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 14 பவுண்டரிகள் அடங்கும். இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய அமெலியா கெர் 45 (24) ஓட்டங்கள் விளாசினார்.
@SPORTZPICS for IPL
இதன்மூலம் மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்கள் குவித்தது. குஜராத் அணியின் தரப்பில் ஸ்னேக் ராணா 2 விக்கெட்டுகளும், கார்ட்னர், தனுஜா மற்றும் வர்ஹம் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
@SPORTZPICS for IPL
சுருண்ட குஜராத்
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 15.1 ஓவர்களில் 64 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இறுதிவரை வெற்றிக்காக போராடிய தமிழக வீராங்கனை தயாளன் ஹேமலதா 29 ஓட்டங்கள் எடுத்தார். அவரது ஸ்கோரில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி அடங்கும்.
மும்பை அணியின் தரப்பில் சைகா 4 விக்கெட்டுகளும், நட் சிவெர் மற்றும் அமெலியா கெர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
@wplt20)