செடிகளில் திடீரென தோன்றும் நுரை போன்ற பொருள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை
பிரித்தானிய தோட்டங்களில் உள்ள தாவரங்களில் திடீரென நுரை போன்ற ஒரு பொருள் உருவாகத் துவங்கியுள்ள நிலையில், அது தொடர்பாக பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அது என்ன பொருள்?
அதாவது, தாவரங்களின் தண்டுகளில் காணப்படும் spittlebug என்னும் பூச்சி தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காக தன்னைச் சுற்றி இந்த நுரைபோன்ற பொருளை உருவாக்கிக்கொள்கிறது.
அந்த நுரைக்குள் மறைந்திருந்து அது தாவரத்தின் சாற்றை உறிஞ்சி தனக்கு உணவாக்கிக்கொள்கிறது. இந்த பூச்சி, மே மாத இறுதி முதல், ஜூன் மாத இறுதி வரை தீவிரமாக பரவும்.
Nottingham Post
அந்த பூச்சி தாவரத்திலிருந்து குறைவாகவே சாற்றை உறிஞ்சும் என்பதாலும், அது மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்காது என்பதாலும் அதைக் குறித்து கவலைப்படவேண்டாம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
ஒரு எச்சரிக்கை
ஆனாலும், இந்த spittlebug பூச்சிகள், Xyella என்னும் நோயை ஒரு தாவரத்திலிருந்து மற்றொரு தாவரத்திற்கு பரவச்செய்யலாம் என்பதால் அறிவியலாளர்கள் கவலையடைந்துள்ளார்கள்.
அந்த நுரை போன்ற விடயத்தைத் தொடவேண்டாம் என எச்சரிக்கும் அறிவியலாளர்கள், அந்த spittlebug பூச்சிகள் மூலம், Xyella என்னும் ஒரு பயங்கர கிருமி மற்ற தாவரங்களுக்கு பரவலாம் என்பதால், அந்த கிருமி பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்படும் நிலையில், அந்த கிருமி கண்டுபிடிக்கப்பட்ட தாவரத்தைச் சுற்றி 100 மீற்றர் சுற்றளவிலுள்ள அனைத்துத் தாவரங்களையும் அழிக்கவேண்டியிருக்கும்.
Alamy
அதன் பின், அந்த தாவரத்திலிருந்து அந்த கிருமி மற்ற தாவரங்களுக்கு பரவுவதைத் தவிர்ப்பதற்காக, 5 கிலோமீற்றர் தொலைவுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு அந்த தாவரத்தை தனிமைப்படுத்தவேண்டியிருக்கும்.
ஏனென்றால், அந்தக் கிருமி பிரித்தானியாவுக்கே சொந்தமான தாவர இனங்களையே அது அழித்துவிடக்கூடும் என எச்சரிக்கிறார்கள் அறிவியலாளர்கள்.
Pixabay
Getty - Contributor