தேர்தல் பரப்புரை... 24 மணி நேரத்தில் ரூ 677 கோடி நிதி திரட்டி வரலாறு படைத்த கமலா ஹாரிஸ்

Joe Biden Kamala Harris Election
By Arbin Jul 22, 2024 08:37 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களம் காணவிருக்கும் தற்போதைய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் தேர்தல் பரப்புரைக்காக நிதி திரட்டுவதில் வரலாறு படைத்துள்ளார்.

பெருந்தொகையை திரட்டியதில்லை

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், பல ஆயிரக்கணக்கான நன்கொடையாளர்களிடம் இருந்து மொத்தம் 81 மில்லியன் டொலர் நிதி திரட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 677 கோடி என்றே கூறப்படுகிறது.

தேர்தல் பரப்புரை... 24 மணி நேரத்தில் ரூ 677 கோடி நிதி திரட்டி வரலாறு படைத்த கமலா ஹாரிஸ் | Harris Campaign Record Fundraising

இதில் பெரும்பாலானவர்கள் முதல் முறையாக இந்தத் தேர்தலுக்காக நிதி அளித்துள்ளனர். மேலும், ஜனாதிபதி தேர்தலில் களம் காணும் எந்த ஒரு வேட்பாளரும் 24 மணி நேரத்தில் இந்த அளவுக்கு பெருந்தொகையை திரட்டியதில்லை என்றே தரவுகளின் அடிப்படையில் குறிப்பிடுகின்றனர்.

மொத்தமாக மூன்று அமைப்புகள் கமலா ஹாரிஸ் சார்பில் நிதி திரட்டியுள்ளது. 880,000 நன்கொடையாளர்களுக்கும் அதிகமானோர் நிதி அளித்துள்ளனர். இதில் 60 சதவிகிதத்தினர் 2024 தேர்தலில் முதல் முறையாக நிதி அளிப்பவர்கள் என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த திடீர் எழுச்சி, மற்றும் வரலாறு காணாத ஆதவும் கமலா ஹாரிஸ் கட்டாயம் இந்த தேர்தலில் வெல்வார் என்ற நம்பிக்கையை அடித்தட்டு மக்களில் விதைத்துள்ளதை உணர்த்துவதாக, தேர்தல் பரப்புரைக்கான செய்தித் தொடர்பாளர் Kevin Munoz தெரிவித்துள்ளார்.

கட்சி மாநாட்டில் அறிவிப்பார்கள்

ஏற்கனவே பல தரப்பு மக்கள் மற்றும் கூட்டணியில் இருந்து கமலா ஹாரிஸ் மீது நம்பிக்கை வைத்து ஆதரவளித்து வருகின்றனர். கமலா ஹாரிஸ் மீது குவியும் ஆதரவால் டொனால்டு ட்ரம்ப் தரப்பு அச்சத்தில் இருப்பது, அவர்களின் தரமற்ற பரப்புரையே சான்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பரப்புரை... 24 மணி நேரத்தில் ரூ 677 கோடி நிதி திரட்டி வரலாறு படைத்த கமலா ஹாரிஸ் | Harris Campaign Record Fundraising

இதனிடையே, கமலா ஹாரிஸ் முன்னெடுக்கும் தேர்தல் பரப்புரைக்கான நிதி 250 மில்லியன் டொலர் என அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஜனநாயக கட்சி இதுவரை கமலா ஹாரிஸ் தான் தங்களின் வேட்பாளர் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

அடுத்த மாதம் நடக்கும் கட்சி மாநாட்டில் யார் வேட்பாளர் என்பது குறித்து அறிவிப்பார்கள். இருப்பினும், ஜோ பைடன் தேர்தல் களத்தில் இருந்து விலகியுள்ள நிலையில், அந்த இடத்திற்கு கமலா ஹாரிஸ் முன்மொழியப்படுவார் என்றே தகவல் கசிந்துள்ளது.

ஜோ பைடனும் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸை தாம் ஆதரிப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். அத்துடன் பில் மற்றும் ஹிலாரி கிளிண்டனும் ஆதரவளித்துள்ளனர். ஆனால் பராக் ஒபாமா மட்டும் இதுவரை கமலா ஹாரிஸ் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் மெளனமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US