அடுத்த ஆண்டு ஹரி மேகன் தம்பதியருக்கு எப்படி இருக்கும்: பிரபல ஜோதிடர் கூறும் ஆரூடம்
பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும், நேற்று தங்கள் ஏழாவது ஆண்டு திருமண நாளைக் கொண்டாடிய நிலையில், அவர்களது எதிர்காலம் எப்படி இருக்கும் என ஆரூடம் கூறியுள்ளார் பிரபல ஜோதிடர் ஒருவர்.
இனி எல்லாம் நல்லதே நடக்கும்
நேற்று, அதாவது, மே மாதம் 19ஆம் திகதி, பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும், தங்கள் ஏழாவது ஆண்டு திருமண நாளைக் கொண்டாடிய நிலையில், அடுத்த 12 மாதங்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் என்று கூறியுள்ளார் பிரபல ஜோதிடரான Inbaal Honigman.
Image: AFP via Getty Images
ஹரி மேகன் தம்பதியர் மீண்டும் ராஜ குடும்பத்தில் இணைவார்களா?
பாரம்பரிய அர்த்தத்தின்படி பார்த்தால், ஹரி மேகன் தம்பதியர், மீண்டும், மூத்த, பணியாற்றும் ராஜ குடும்ப உறுப்பினர்களாக ராஜ குடும்பத்தில் இணைய மாட்டார்கள் என்று கூறியுள்ள Inbaal, ஆனால், ராஜகுடும்பத்தின் அமைப்பு மற்றும் விதிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் கடுமையான எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்துவார்கள் என்றும், அதனால் சில புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.
Image: Anadolu via Getty Images
திருமண வாழ்வு எப்படி இருக்கும்?
அடுத்த ஆண்டு முழுவதும், ஹரி மேகன் தம்பதியரின் திருமண வாழ்வு பல முக்கிய நபர்களின் நட்புகள், இலவச சுற்றுப்பயணங்கள் மற்றும் வாய்ப்புகள் போன்ற விடயங்களால் பிரமாதமாக இருக்கும் என்கிறார் Inbaal.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |