மேகன் மார்க்கல் மற்றும் இளவரசர் ஹரியின் திடீர் மன மாற்றம்: வருத்தமும், பீதியுமே காரணம் என நிபுணர்கள் தகவல்
நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சியில் மாற்றம் கொண்டு வர இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் முயற்சி.
இருவரும் அதிக தூரம் சென்று விட்டத்தை உணர்ந்து இருப்பதை காட்டுகிறது என அரச நிபுணர் டங்கன் லார்கோம்ப் கருத்து.
நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சி தொடர்பாக இளவரசர் ஹரி மற்றும் மேகனின் இரண்டாவது எண்ணங்கள் அவர்களது வருத்தத்தின் அலறல்கள் என பல்வேறு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Netflix தளத்திற்காக உருவாக்கப்பட்ட இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் தொடர்பான ஆவணப் படத்தில் சில மாற்றங்களை செய்யவும், அதன் வெளியீட்டு திகதியை மாற்றி வைக்கவும் தி டியூக் மற்றும் டச்சஸ் ஆஃப் சசெக்ஸ் விரும்புவதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியாகி இருந்தன.
GETTY
இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஜோடி Netflix ஸ்ட்ரீமிங் தளத்திற்காக 2020 ஆம் ஆண்டு பல மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள ஆவணப்படத்தில் ஒப்பந்தமாகி இருந்த நிலையில், அந்த ஆவணப்படத்தில் இருந்து மன்னர் மூன்றாம் சார்லஸ், அவரது மனைவி குயின் கன்சார்ட் கமீலா மற்றும் வேல்ஸ் இளவரசி கேட் ஆகியோர் தொடர்பான கருத்துகளை நீக்கவோ அல்லது குறைக்கவோ சசெக்ஸ் தம்பதி விரும்புவதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் மேலும் ராணியாரின் மறைவு துக்கம் தற்போது தான் நிறைவடைந்து இருப்பதால், ஆவணப்படத்தை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடவும் Netflix நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
REUTERS
இந்நிலையில் இளவரசர் ஹரி மற்றும் இளவரசி மேகன் ஆகிய இருவரின் இந்த திடீர் எண்ண மாற்றத்திற்கு அவர்களது வருத்தத்தின் அலறல்களே காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அரச நிபுணர் டங்கன் லார்கோம்ப் தெரிவித்துள்ள கருத்தில், அறிக்கைகள் சரியாக இருந்தால், இளவரசர் ஹரி மற்றும் இளவரசி மேகன் இருவரும் அதிக தூரம் சென்று விட்டத்தை உணர்ந்து இருப்பதை காட்டுகிறது.
மேலும் மில்லியன் கணக்கான டாலர்கள் செலுத்தும் நிகழ்ச்சியில் மாற்றங்களைச் செய்வதற்கான அவர்களின் கோரிக்கை அவர்கள் பங்கில் வருத்தம் இருப்பதை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
AFP/ GETTY
insider-ல் வெளிவந்த செய்தியில், ஹரியும் மேகனும் மிக அடிப்படையான மொழியைக் கூட மாற்ற முயல்வதில் பீதியடைந்துள்ளனர். ஆனால் அது அவர்களின் சொந்த வாயிலிருந்து வந்த கதை என தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: புடினுக்கு துரோகம் செய்த ரஷ்ய குடிமக்கள்: பாலம் வெடிப்பு தொடர்பான குற்றவாளிகளை FSB கைது
மற்றொரு ஆதாரம் வெளியிட்ட தகவலில், தாங்கள் வழங்கிய உள்ளடக்கத்தை திரும்பப் பெற அவர்கள் குறிப்பிடத்தக்க கோரிக்கைகளை வைத்துள்ளனர், சில Netflix ஊழியர்கள் நம்பும் அளவுக்கு அவை வழங்கப்பட்டால், அது காலவரையின்றி திட்டத்தை நிறுத்தி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.