ஆளுக்கொருபக்கம் செல்லும் ஹரி மேகன்: பிரிய இருப்பதாக பரவும் செய்திகள்...
இளவரசர் ஹரி தென்னாப்பிரிக்காவுக்கு தனியே செல்ல, அவரது மனைவி, தங்கள் பிள்ளைகளுடன் லாஸ் ஏஞ்சல்சில் வேறு வேலைகளில் ஈடுபட்டுவருகிறார்.
எனவே, ஹரியும் மேகனும் பிரிய இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.
ஆளுக்கொருபக்கம் செல்லும் ஹரி மேகன்
ஜூலை மாதம் 4ஆம் திகதி, ஹரியும் மேகனும் தங்கள் பிள்ளைகளுடன் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்கள். அதற்குப் பிறகு இருவரும் வெளியே சேர்ந்து நடமாடவில்லை. ஆகவே, அவர்கள் இருவரும் பிரிய இருப்பதாகவும், அவர்கள் பணக்கஷ்டத்தில் இருப்பதாகவும் செய்திகள் பரவிவருகின்றன.
Image: POOL/AFP via Getty Images
எது உண்மை?
ஆனால், தம்பதியருக்கு நெருக்கமான ஒருவர், இவையெல்லாம் வதந்திகள். இந்த செய்திகளில் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.
மேகன் ஹாலிவுட் நிறுவனம் ஒன்றுடன் பணி ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். அதில் ஹரி இல்லை.
ஹரி நெட்ப்ளிக்ஸ் தொடர் ஒன்றிற்காக தென்னாப்பிரிக்கா செல்ல இருக்கிறார். மேகனுக்கு லாஸ் ஏஞ்சல்சில் புதிய புராஜக்ட் ஒன்று கிடைத்துள்ளதால் அவர் ஹரியுடன் செல்லவில்லை.
Image: Getty Images for 2022 Robert F. Kennedy Human Rights Ripple of Hope Gala
கடந்த மாதம், Spotify நிறுவனம், ஹரி மேகன் தம்பதியருடன் செய்துகொண்ட 15 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய ஒப்பந்தம் ஒன்றை திடீரென முறித்துக்கொண்டது உண்மையாகவே பெரிய இழப்புதான்.
ஆக, ஹரியும் மேகனும் தனித்தனியே வெவ்வேறு புராஜக்ட்களில் ஈடுபட்டால், அதனால் நல்ல வருவாய் கிடைக்கும் என நம்புவதாகவும், ஆகவேதான் இருவரும் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை எனவும், அவர்கள் பிரியப்போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்றும் கூறியுள்ளார்கள் தம்பதியருக்கு நெருக்கமான சிலர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |