மன்னருடைய அழைப்புக்கு பதிலளிக்க ஹரி மேகன் தம்பதியர் இவ்வளவு தாமதித்தது ஏன்?: காரணம் வெளியானது
மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்கு ஹரி மேகன் தம்பதியருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டும், அவர்கள் பதிலளிப்பதற்கு இவ்வளவு தாமதமானது ஏன் என்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
அவமதிக்கப்பட்டாலும் அழைப்பு விடுத்த மன்னர்
ஹரியும் மேகனும் பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பின், அவர்கள் ராஜ குடும்பத்தை பல வகையில் அவமதித்தும், மன்னர் சார்லஸ் தன்னுடைய முடிசூட்டுவிழாவிற்கு அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பினார்.
ஏப்ரல் மூன்றாம் திகதிக்குள் ஹரி மேகன் தரப்பிலிருந்து பதில் வரவேண்டும் என கூறப்பட்டிருந்த நிலையிலும், அவர்கள் முடிசூட்டுவிழாவிற்கு வருவது குறித்து பதிலளிக்கவில்லை.
மன்னருடைய அழைப்புக்கு பதிலளிக்க ஹரி மேகன் தம்பதியர் தாமதித்தது ஏன்?
இந்நிலையில், ஹரியும் மேகனும் முடிசூட்டுவிழாவிற்கு வந்தால், அவர்கள் எங்கே அமரவைக்கப்படுவார்கள் என்ற எண்ணமே, அவர்கள் தங்கள் வருகை குறித்து பதிலளிக்க தாமதமானதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
அதாவது, மகாராணியாருடைய இறுதிச்சடங்கு முதலான நிகழ்ச்சிகளில், இளவரசர் வில்லியமுக்கும் அவரது மனைவி கேட்டுக்கும் முதல் வரிசையில் இடமளிக்கப்பட்டிருந்த நிலையில், இளவரசர் ஹரிக்கும் மேகனுக்கும் இரண்டாவது வரிசையில்தான் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
RSVP
ஆக, இப்போது முடிசூட்டுவிழாவிற்கு வந்தால், தாங்கள் எங்கே அமரவைக்கப்படுவோம் என்ற எண்ணம் காரணமாகவே, விழாவிற்கு வருவது குறித்து பதிலளிக்க ஹரி மேகன் தரப்பு தாமதம் செய்துள்ளது.
தற்போது, மன்னருடைய முடிசூட்டுவிழாவிற்கு இளவரசர் ஹரி மட்டுமே வருகிறார். அவரது மனைவி மேகன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Credit: Getty