இன்னும் சில ஆண்டுகள் தான்... அதன் பிறகு ஹரி பிரித்தானியா திரும்புவார்: ஊடக பிரபலம் ஆருடம்
தமது காதல் மனைவியான மேகன் மெர்க்கலை பிரிந்து இன்னும் 5 ஆண்டுகளில் இளவரசர் ஹரி நிரந்தரமாக பிரித்தானியா திரும்புவார் என பிரபலமான ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேகன் அமெரிக்காவிலேயே தங்கிவிடுவார்
ஊடக பிரபலம் ஜெர்மி கைல் தெரிவிக்கையில், இந்த பிரிவுக்கு பின்னர் தமது இரண்டு பிள்ளைகளுடன் மேகன் மெர்க்கல் அமெரிக்காவிலேயே தங்கிவிடுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
@getty
ஹரியும் மேகனும் தாங்கள் ஒன்றாக இணைந்திருக்கப் போவதில்லை என்பதை புரிந்துகொண்டதால் தானோ பணம் சம்பாதிக்கும் வழிகளை தேடிக்கொள்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் ஐந்து ஆண்டுகள் தான், தனது வாலை சுருட்டிக்கொண்டு ஹரி நிரந்தரமாக பிரித்தானியாவுக்கு திரும்பி விடுவார். அதேவேளை, விரும்பிய அனைத்தையும் தம்முடன் வைத்துக் கொண்டு, தமது இரு பிள்ளைகளுடன் மேகன் மெர்க்கல் கலிபோர்னியாவில் தங்கிவிடுவார் என்கிறார் ஜெர்மி கைல்.
தனியாக நேரம் செலவிட ஹொட்டல்
ஹரி- மேகன் இடையே தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் வெளிவரும் நிலையிலேயே ஜெர்மி கைல் தமது ஆருடத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Image: alexilubomirski
மட்டுமின்றி, மேகனை தவிர்த்து தனியாக நேரம் செலவிட ஹொட்டல் ஒன்றில் ரகசியமாக ரூம் ஒன்றை பதிவு செய்து வைத்துள்ளதாக ஹரி தொடர்பில் வெளியான தகவலுக்கு இருவருமே மறுப்பு தெரிவித்திருந்தனர்.
மேலும், ஹரியை தவிர்த்து மேகன் மட்டும் சமீபத்தில் பல்வேறு பார்ட்டிகளில் பங்கேற்பதாக பத்திரிகையாளர் Petronella Wyatt சமீபத்தில் அம்பலப்படுத்தியிருந்தார்.