தாய் டயானாவின் சிலையை திறந்து வைத்த வில்லியம்-ஹரி! வதந்திகளுக்கு வைத்த முற்றுப்புள்ளி: வெளியான புகைப்படங்கள்
மறைந்த இளவரசி டயானாவின் சிலையை ஹரி மற்றும் வில்லியம் இருவரும் சேர்ந்து திறந்து வைத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இன்று பிரித்தானிய இளவரசி டயானாவின் 60-ஆவது பிறந்தநாள் என்பதால், தங்கள் தாயின் நினைவாக, இளவரசர்கள் வில்லியமும் அவரது தம்பியான ஹரியும், டயானாவின் உருவச் சிலை ஒன்றை கென்சிங்டன் மாளிகையில் உள்ள தோட்டத்தில் திறந்து வைக்க முடிவு செய்தனர்.
அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வந்தது. இதையடுத்து இன்று மதியம் உள்ளூர் நேரப்படி 2 மணிக்கு சிலை திறப்பு நிக்ழச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன் படி இளவரசர் ஹரி மற்றும் வில்லியம் இருவரும் சிலை திறக்கப்படும் இடத்திற்கு வந்தனர். ஹரி திருமணத்திற்கு பிறகு அளித்த பேட்டி, அரச குடும்பத்தில் இருந்து விலகல் போன்றவை காரணமாக, வில்லியம் மற்றும் ஹரிக்கு இடையே பிரச்சனை இருப்பதாகவும், இருவருமே பேசிக் கொள்ளமாட்டார்கள் என்றும் செய்தி வெளியானது.
ஆனால், அதற்கு எல்லாம் இன்று முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இருவரும் சிரித்துக் கொண்டு பேசிய படி வந்து தங்கள் தாயின் சிலையை திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் இளவரசர் வில்லியம், இளவரசர் ஹரி மற்றும் டயானாவின் உறவினர்கள் சிலர் மட்டுமே கலந்துகொண்டுனர். மகாராணியாரோ, இளவரசர் சார்லசோ அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை,
இளவரசி டயானாவின் சகோதரரும் இளவரசர்கள் வில்லியம், ஹரியின் மாமாவுமான Earl Spencer, இந்த நிகழ்ச்சி பிரிந்த சகோதார்களான வில்லியமையும் ஹரியையும் ஒன்றிணைக்கும் என்று நம்புவதாக தெரிவித்திருந்தார்.
அத்துடன், சிலை திறப்பு நிகழ்ச்சிக்குப் பின் வில்லியமும் ஹரியும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.