தனக்கே தெரியாமல் தாமதமாக போல்டான வீரர்! ஆஷஸ் டெஸ்டின் சுவாரசிய வீடியோ
ஆஷஸ் முதல் டெஸ்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் ஹாரி புரூக் வித்தியாசமான முறையில் போல்டு ஆனார்.
முதல் டெஸ்ட்
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட், நேற்று பர்மிங்ஹாமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தெரிவு செய்து முதலில் துடுப்பாடியது. டக்கெட் 12 ஓட்டங்களிலும், ஒலி போப் 31 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
மறுபுறம் அதிரடி காட்டிய ஜக் கிரேவ்லே அதிரடியாக 61 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் அணியின் ஸ்கோர் 175 ஓட்டங்களாக இருந்தபோது லயன் வீசிய ஓவரை ஹாரி புரூக் எதிர்கொண்டார்.
A freak dismissal.
— England Cricket (@englandcricket) June 16, 2023
Live clips/Scorecard: https://t.co/TZMO0eJDwY pic.twitter.com/cIUQaANJ2x
வித்தியாசமான அவுட்
அந்த ஓவரின் 2வது பந்து ஹாரியின் காலில் பட்டு மேழெழுந்தது. ஆனால் ஹாரிக்கும், விக்கெட் கீப்பருக்கும் பந்து எங்கே சென்றது என தெரியாமல் விழித்தனர்.
Getty
அப்போது பந்து கீழே வந்து விழுந்து ஸ்டம்பை தாக்கியதில் ஹாரி போல்டு ஆனார். ஒரு கணம் எப்படி அவுட் ஆனேன் என்று அவரே குழம்பி நின்றார்.
இதுதொடர்பான சுவாரசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஹாரி புரூக் 37 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்தார்.
AP