இலங்கைக்கு எதிராக 57 பந்தில் சதம் விளாசிய வீரர்! கொழும்பில் ருத்ர தாண்டவம்..இமாலய இலக்கு
கொழும்பில் நடந்து வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 357 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தொடங்க டக்கெட் (7), ரெஹான் (24) வெளியேறினர்.
Ishara S Kodikara/AFP/Getty Images
பின்னர் ஜேக்கப் பெத்தேல் 72 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் விளாசினார்.
அதன் பின்னர் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் கூட்டணி இலங்கையின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது.
ஜோ ரூட் (Joe Root) நிதானமாக ஆடி 20வது ஒருநாள் சதம் விளாசினார். மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய ஹாரி ப்ரூக் (Harry Brook) 57 பந்துகளில் சதம் விளாசினார்.
Ishara S Kodikara
இருவரின் அபார ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 357 ஓட்டங்கள் குவித்தது. ஜோ ரூட் 111 (1 சிக்ஸர், 9 பவுண்டரிகள்) ஓட்டங்கள் குவித்தார்.
ருத்ர தாண்டவம் ஆடிய ஹாரி ப்ரூக் 66 பந்துகளில் 136 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 9 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடங்கும்.
What a finish to our innings! 🎆
— England Cricket (@englandcricket) January 27, 2026
🏴 Joe Root - 111* (108)
🏴 Harry Brook - 136* (66)
Sri Lanka require a lofty 358 runs to win. pic.twitter.com/7YlgQZyZ3U
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |