114 பந்துகளில் இரட்டை சதம்; சுப்மன் கில்லின் சாதனையை முறியடித்த ஹாரி ப்ரூக்
harry brook double century vs sri lanka break gill record: இலங்கைக்கு ஒருநாள் எதிரான போட்டியில், 114 பந்துகளில் இரட்டை சதம் விளாசிய ஹாரி ப்ரூக், சுப்மன் கில்லின் அதிவேக ODI இரட்டை சதம் என்ற சாதனையை முறியடித்துள்ளார்.
இரட்டை சதம் அடித்த ஹாரி
ப்ரூக் பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடர், பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
ராவல்பிண்டியில் இன்று நடைபெறும் போட்டியில், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம் ஆடியது.
ஹாரி ப்ரூக்கின் இரட்டை சதத்தால், இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 429 ஓட்டங்கள் குவித்தது.

அதிரடியாக ஆடிய இங்கிலாந்து அணித் தலைவர் ஹாரி ப்ரூக், 116 பந்துகளில் 21 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் உட்பட 216 ஓட்டங்கள் குவித்தார்.
இதன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும், ஒருநாள் போட்டிகளில் அதிவேக இரட்டைச் சதம் அடித்தவர் என்ற சாதனையையும் ஹாரி ப்ரூக் படைத்துள்ளார்.

முன்னதாக இந்திய அணித்தலைவர் சுப்மன் கில் 117 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்ததே, ஒருநாள் போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிவேக இரட்டைச் சதமாக இருந்த நிலையில், ஹாரி ப்ரூக் 114 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
430 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியுள்ள இலங்கை அணி, 18.5 ஓவர்களுக்கு 2 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்கள் அடித்து தொடர்ந்து விளையாடி வருகிறது.