ஐ.பி.எல், பாகிஸ்தான் லீக்களில் இதனால்தான் விளையாடுவத்தில்லை - இங்கிலாந்து கேப்டன்
இங்கிலாந்து அணித்தலைவர் ஹாரி ப்ரூக் The Hundred தொடரைத் தவிர, வேறெதிலும் விளையாட விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
ஹாரி ப்ரூக்
பென் ஸ்டோக்ஸின் ஓய்வினைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் மூன்று விதமான கிரிக்கெட் வடிவங்களிலும் அணித்தலைவராக செயல்படுவதை நிர்வகிப்பது ஒரு கடினமான பணி என ஹாரி ப்ரூக் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாக பேசிய ஹாரி ப்ரூக் (Harry Brook), டெஸ்ட் அணித்தலைவராக இருப்பது சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "கேப்டன் பொறுப்பை ஏற்பது, அதாவது நமது விளையாட்டின் மிக உயர்ந்த வடிவத்தில் இங்கிலாந்து அணிக்கு தலைமை தாங்குவது ஒரு பெருமையாக இருக்கும். அதுவே உச்சகட்டமாகும்" என்றார்.
என் ஒரே நோக்கம்
ஐபிஎல் தொடர் குறித்து பேசிய ப்ரூக், "The Hundred தொடரைத் தவிர வேறு எந்த ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் தொடரிலும் விளையாட விரும்பவில்லை என்றும், இங்கிலாந்திற்காக கிரிக்கெட் விளையாடுவதே என் ஒரே நோக்கம் என்றும் நான் கூறியுள்ளேன்.
மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நான் செய்யும் அனைத்தும் இங்கிலாந்திற்காக என்னால் முடிந்தவரை சிறப்பாக செயல்படுவதை நோக்கமாக கொண்டவை.
அதனால்தான் நான் ஐ.பி.எல் (IPL), பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) மற்றும் பிற ஃப்ரான்சைஸ் போட்டிகளில் விளையாடுவதில்லை" என தெரிவித்துள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |