அடுத்தடுத்து விக்கெட்..20 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டிய ஹாரி ப்ரூக்
Harry brook fastes t20 fifty vs australia: அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியில் ஹாரி ப்ரூக் அதிரடி அரைசதம் விளாசினார்.
மெல்போர்னில் நடந்து வரும் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில், இங்கிலாந்து அணித்தலைவர் ஹாரி ப்ரூக் 65 ஓட்டங்கள் விளாசினார்.
பிலிப் சால்ட் டக்அவுட்
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, இங்கிலாந்து முதலில் துடுப்பாட்டத்தைத் தொடங்கியது.
ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஜோயல் டேவிஸின் பந்துவீச்சில் பிலிப் சால்ட் ஆட்டமிழந்தார். பின்னர் 10 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அனேயுரின் டொனால்ட் ஆட்டமிழந்தார்.
இதனால் இங்கிலாந்து அணி 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகள் என் தடுமாறியது. அப்போது அதிரடியில் இறங்கிய ஹாரி ப்ரூக் ஹாட்ரிக் சிக்ஸர் என பறக்கவிட்டார்.
ஹாரி ப்ரூக் அதிவேக அரைசதம்
ஹாரி ப்ரூக் (Harry Brook) 20 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதன்மூலம் அதிவேகமாக அரைசதம் அடித்த 5வது இங்கிலாந்து வீரர் எனும் பெருமையைப் பெற்றார். மொத்தம் 28 பந்துகளை எதிர்கொண்ட ப்ரூக் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

டாம் பான்டன் 22 பந்துகளில் 39 ஓட்டங்களும், ஜோர்டன் காக்ஸ் 27 ஓட்டங்களும் விளாச, இங்கிலாந்து அணி 187 ஓட்டங்கள் எடுத்தது.
நிகில் சௌத்ரி, ஜேக் எட்வார்ட்ஸ் தலா 2 விக்கெட்டுகளும், ஜோயல் டேவிஸ், ரிலே மெரிடித், ட்வர்ஷுய்ஸ் மற்றும் ஆடம் ஜாம்பா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
