அதிவேக முச்சதம் விளாசிய வீரர்! 20 ஆண்டுகால சாதனை முறியடிப்பு
இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அதிவேக முச்சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
ஜோ ரூட் 262
முல்தானில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 556 ஓட்டங்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை ஆடியது.
இரட்டை சதம் அடித்த ஜோ ரூட் (Joe Root) 262 ஓட்டங்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். ரூட், புரூக் கூட்டணி 454 ஓட்டங்கள் எடுத்தது.
ஹாரி புரூக் முச்சதம்
ஹாரி புரூக் இரட்டை சதம் கடந்தபோதும் அதிரடியில் மிரட்டினார். சிக்ஸர், பவுண்டரி என விளாசிய அவர் தனது முதல் முச்சதத்தை அடித்தார்.
குறிப்பாக, 310 பந்துகளில் 300 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக முச்சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார். (இதற்கு முன்பு 2007-08யில் விரேந்தர் சேவாக் 278 பந்துகளில் 300 ஓட்டங்கள் அடித்தார்)
ஜேமி ஸ்மித் 31 (24) ஓட்டங்களில் வெளியேற, ஹாரி புரூக் 317 (322) ஓட்டங்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 3 சிக்ஸர், 29 பவுண்டரிகள் அடங்கும்.
இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 823 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனைத் தொடர்ந்து 267 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
அதிவேக முச்சதம் அடித்த வீரர்கள்
- விரேந்தர் சேவாக் - 278 பந்துகள் (2007-08)
- ஹாரி புரூக் - 310 பந்துகள் (2024)
- மேத்யூ ஹேடன் - 362 பந்துகள் (2003-04)
- விரேந்தர் சேவாக் - 364 பந்துகள் (2003-04)
??? ?? ??? ?????? ?????? ?? ???? ??????? ????? ?? ?? ??? ??? ????? ????? ??
— Sportskeeda (@Sportskeeda) October 10, 2024
We witnessed a record-breaking triple-century innings in Multan ?#HarryBrook #Tests #PAKvENG #Sportskeeda pic.twitter.com/WW607GYIzT
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |