இங்கிலாந்தை திணற வைத்த இலங்கை வீரர்! அரைசதம் விளாசிய ஹாரி
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஹாரி புரூக் அரைசதம் அடித்தார்.
அசிதா பெர்னாண்டோ மிரட்டல் பந்துவீச்சு
ஓல்டு டிராஃபோர்டு டெஸ்டில் இலங்கை அணி 236 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனதைத் தொடர்ந்து, இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது.
தொடக்க வீரர் பென் டக்கெட் 18 (20) ஓட்டங்கள் எடுத்த நிலையில் அசிதா பெர்னாண்டோ (Asitha Fernando) பந்துவீச்சில் lbw ஆனார்.
Changing gear ⚙
— England Cricket (@englandcricket) August 22, 2024
Catch Up Highlights: https://t.co/3J9ouQuVTn
??????? #ENGvSL ?? #EnglandCricket pic.twitter.com/MFURaaTO6I
பின்னர் களமிறங்கிய அணித்தலைவர் ஓலி போப் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அசிதா ஓவரில் போல்டானார்.
அணியின் ஸ்கோர் 67 ஆக உயர்ந்தபோது டேனியல் லாரன்ஸ் 30 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து வந்த ஜோ ரூட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த இங்கிலாந்து 100 ஓட்டங்களை கடந்தது.
ஹரி புரூக் அரைசதம்
ரூட் 42 ஓட்டங்கள் எடுத்தபோது அசிதா ஓவரில் சண்டிமலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிய ஹரி புரூக் (Harry Brook) அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, டெஸ்டில் தனது 9வது அரைசதத்தை விளாசினார். அவர் 56 ஓட்டங்கள் எடுத்து பிரபத் ஜெயசூரியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து அணி தற்போது வரை 40 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |