மைதானத்தில் என்ட்ரி கொடுத்த ஹாரி புருக்கின் கேர்ள் பிரெண்ட் - கடுப்பான பெற்றோர்கள்!
ஹாரி புருக்கின் கேர்ள் பிரெண்ட் மைதானத்தில் என்ட்ரி கொடுத்தபோடு, பெற்றோர்கள் கடுப்பானதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீரர் ஹாரி புருக்
10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் ஹாரி ப்ரூக் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றார்.
என்ட்ரி கொடுத்த ஹாரி புருக்கின் கேர்ள் பிரெண்ட்
இங்கிலாந்து அணியில் இடம் பிடித்த சில மாதங்களில் ஸ்டாரான ஹாரி புருக்கை, 13 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து ஹைதராபாத் அணி வாங்கியது.
இந்த பெரிய தொகை கொடுத்து வாங்கியவர் காவ்யா மாறன். ஆனால், முதல் சில போட்டிகளில் ஹாரி புருக் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ராஜஸ்தானுக்கு எதிராக 13 ஓட்டங்களிலும், லக்னோக்கு எதிராக 3 ரன்கள் பஞ்சாப் எதிராக 13 ஓட்டங்கள் மட்டுமே அவர் எடுத்துள்ளார். இது ஐதராபாத் அணியில் பெரும் ஏமாற்றமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஹாரி புருக், தன் ஆட்டத்தை பார்க்க பெற்றோரை அழைத்துள்ளார். மகன் விளையாடியதை பெற்றோர்கள் ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்த போது, ஹாரி புருக்கின் காதலியும் மைதானத்தில் எண்டிரி கொடுத்தார்.
காதலி முன் கெத்து காட்டலாம் என்று ஹாரி புருக் கணக்கு போட நிலையில், திடீரென மைதானத்தை விட்டு ஹாரி பெற்றோர்கள் பாதியில் எழுந்து சென்றுவிட்டார்கள்.
இதை எதிர்பார்க்காத ஹாரி பிருக், 55 பந்துகளில் சதம் அடித்த பிறகும் கூட கொஞ்சம் பரபரப்பாகவே காணப்பட்டார். அதன் பிறகு, கிரிக்கெட் வர்ணனையாளர்களுடன் ஹாரி பிருக் பேசும் போது நடந்த உண்மையை கூறியுள்ளார்.
இப்போட்டியை காண என் கேர்ள் பிரெண்ட் வந்ததாகவும், ஆனால் பெற்றோர்கள் பாதியில் சென்றுவிட்டதாகவும் வருத்தத்துடன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.