ஸ்டோக்ஸ் தலைமையில் வலுவாக ஆஷஸில் களமிறங்கும் இங்கிலாந்து: திரும்பும் மிரட்டல் வீரர்
ஆஷஸ் தொடரில் விளையாட உள்ள 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது.
ஸ்டோக்ஸ் தலைமை
2025/26 ஆஷஸ் தொடரில் விளையாட இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியா செல்ல உள்ளது.
இதற்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது.
இந்த அணிக்கு பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) தலைமை தாங்குகிறார். அணியின் துணைத் தலைவராக துடுப்பாட்ட வீரர் ஹாரி புரூக் (Harry Brook) நியமிக்கப்பட்டுள்ளார். ஓலி போப்பிற்கு பதிலாக இவர் செயல்பட உள்ளார்.
கடைசியாக டிசம்பர் 2024யில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ பாட்ஸ் (Matthew Potts), வில் ஜேக்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தோள்பட்டை காயத்தால் ஏற்பட்ட இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இருந்து விலகிய பென் ஸ்டோக்ஸ், நவம்பரில் தொடங்கும் டெஸ்ட் தொடருக்கு தயாராக உள்ளார்.
அணி விபரம்:
- பென் ஸ்டோக்ஸ்
- ஜோப்ரா ஆர்ச்சர்
- கஸ் அட்கின்சன்
- சோயிப் பஷீர்
- ஜேக்கப் பெத்தெல்
- ஹாரி புரூக்
- பிரைடன் கார்ஸ்
- ஜக் கிராவ்லே
- பென் டக்கெட்
- வில் ஜேக்ஸ்
- ஓலி போப்
- மேத்யூ பாட்ஸ்
- ஜோ ரூட்
- ஜேமி ஸ்மித்
- ஜோஷ் டங்
- மார்க் வுட்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |