எங்களை தூண்டியது அந்த தருணம்! இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க அப்போது நினைத்தோம் - இங்கிலாந்து வீரர்
ஜஸ்பிரித் பும்ராவின் ஆக்ரோஷமான பந்துவீச்சுதான் இங்கிலாந்தின் தீவிரத்தைத் தூண்டியது என ஹாரி புரூக் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து வெற்றி
லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரின் ஓல்டு டிராஃபோர்டில் நாளை தொடங்குகிறது.
இந்த நிலையில், லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றி பெற்றதற்கு தூண்டுதலாக இருந்த விடயம் குறித்து, இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் ஹாரி புரூக் (Harry Brook) தெரிவித்துள்ளார்.
திருப்பி பதிலடி
இங்கிலாந்தின் கள அணுகுமுறையைப் பற்றி யோசித்துப் பார்த்த புரூக், இந்தத் தொடரின் முந்தைய தருணத்தால் தூண்டப்பட்ட ஒரு திட்டமிட்ட நடவடிக்கை என்று ஒப்புக்கொண்டார்.
அதாவது, ஜஸ்பிரித் பும்ரா (Jaspirit Bumrah) ஒரு கடுமையான ஓவரை வீசியபோது ஏற்பட்ட பதட்டமான பகுதியைக் குறிப்பிட்டு, அணி தங்கள் உத்தியை மறுபரிசீலனை செய்து, தீவிரத்துடன் பதிலளிக்க சரியான தருணத்தைத் தேர்ந்தெடுத்ததாக கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "முடிந்தவரை ஆட்டத்தின் உணர்வில் விளையாட முயற்சித்தோம். அந்த வீரர்கள் (இந்திய அணி) டக்கெட், கிராவ்ளேயிடம் கடுமையாக செயல்பட்டனர்.
அதைப் பார்த்த நாங்கள், இதுவே இந்தியாவுக்கு திருப்பி பதிலடி கொடுப்பதற்கான சரியான நேரம் என்று முடிவு செய்தோம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |