கீழே விழுந்து பின்னால் சிக்ஸர் அடித்த கேப்டன்! மிரட்டல் வீடியோ
தி ஹண்ட்ரட் போட்டியில் நார்தர்ன் சூப்பர் சார்ஜர்ஸ் அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பர்மிங்காம் பீனிக்ஸை வீழ்த்தியது.
மலான் அரைசதம்
லீட்ஸில் நடந்த போட்டியில் முதலில் ஆடிய நார்தர்ன் சூப்பர் சார்ஜர்ஸ் அணி 193 ஓட்டங்கள் குவித்தது.
Absurd, outrageous, unreal 🤯pic.twitter.com/s1O5bVXIJX
— ESPNcricinfo (@ESPNcricinfo) August 15, 2025
தாவித் மலான் 34 பந்துகளில் 58 ஓட்டங்களும், ஜக் கிராவ்லே 23 பந்துகளில் 45 ஓட்டங்களும் விளாசினர்.
அணித்தலைவர் ஹாரி புரூக் ஆட்டமிழக்காமல் 14 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்கள் குவித்தார்.
மைதானத்தை அதிர வைத்த சிக்ஸர்
டிம் சௌதீ ஓவரில் டில்ஸ்கூப் ஸ்டைலில் கீழே விழுந்தவாறு புரூக் அடித்த சிக்ஸர் மைதானத்தை அதிர வைத்தது.
பின்னர் ஆடிய பர்மிங்காம் பீனிக்ஸ் அணி 9 விக்கெட்டுக்கு 157 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.
ஜேக்கப் பெத்தெல் 48 (23) ஓட்டங்களும், லியாம் லிவிங்ஸ்டன் 46 (31) ஓட்டங்களும் விளாசினர். மேத்யூ போட்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |