அன்புள்ள பாகிஸ்தான், இவரை போன்ற ரத்தினத்தை பெற்றதற்கு நீங்கள் பாக்கியவான்கள்! இங்கிலாந்து வீரரின் பதிவு
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிற்கு ஆதரவு தெரிவித்து இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் ட்வீட் செய்துள்ளார்.
தொடர் தோல்விகள்
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை போராடி டிரா செய்தது.
அதற்கு முன்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர்களை சொந்த மண்ணில் இழந்தது. குறிப்பாக, சொந்த மண்ணில் விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் கூட பாகிஸ்தான் வெற்றி பெறவில்லை.
நிருபர்களின் கேள்வி
இதுகுறித்து நிருபர்கள் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிடம் கேள்வி எழுப்பியபோது, நீங்கள் டெஸ்ட் கேப்டன் பதவியை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டு அவரை தர்மசங்கடமான நிலைக்கு ஆளாக்கினர்.
A journo finally got to ask a question from Babar Azam and he asked him if he should quit Test captaincy.
— Farid Khan (@_FaridKhan) January 8, 2023
Here's what Babar said ? #PAKvNZ pic.twitter.com/gIVb9cAMVS
எனினும் அவர் பொறுமையாக, டெஸ்ட் போட்டிகள் முடிந்துவிட்டதால் ஒருநாள் போட்டி தொடர் குறித்து கேள்வி கேட்குமாறு கூறினார்.
@Cricket Country
பாபர் அசாமிற்கு ஆதரவு
இந்த நிலையில் பாபர் அசாமிற்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் அவரை ஆதரிப்பவர்கள் ட்விட்டரில் #StayStrongBabarAzam என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் பாபர் அசாமிற்கு இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது டீவீட்டில், 'அன்பார்ந்த பாகிஸ்தான், பாபர் அசாம் போன்ற ஒரு ரத்தினத்தை பெற்றிருப்பதால் நீங்கள் பாக்கியவான்கள்' என ஹேஷ்டேக்குடன் தெரிவித்துள்ளார்.
Dear Pakistan, you are blessed to have a gem like Babar Azam ???#StayStrongBabarAzam pic.twitter.com/HFeyEdLEbz
— Harry Brook (@harrybrookk) January 9, 2023