மன்னருக்கும் வில்லியமுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முயல்வதாக வதந்திகள்: இளவரசர் ஹரி விளக்கம்
மன்னர் சார்லசுக்கும் இளவரசர் வில்லியமுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த இளவரசர் ஹரி முயல்வதாக வெளியாகிவரும் வதந்திகள் குறித்து இளவரசர் ஹரி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மன்னரை சந்தித்த இளவரசர் ஹரி
சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றிற்காக பிரித்தானியா வந்த இளவரசர் ஹரியை தன்னுடன் தேநீர் அருந்த வருமாறு மன்னர் சார்லஸ் அழைத்திருந்தார்.
சுமார் 19 மாதங்களுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட இருவரும் சுமார் ஒருமணி நேரம் அளவளாவிக்கொண்டார்கள்.
அதைத் தொடர்ந்து, இளவரசர் ஹரி, தான் மன்னர் சார்லசை சந்தித்ததை, மன்னருக்கும் வில்லியமுக்கும் இடையில் பிளவு ஏற்படுத்துவதற்காக பயன்படுத்திக்கொள்ளக்கூடும் என்னும் அச்சம் உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இளவரசர் ஹரி விளக்கம்
இந்நிலையில், அந்த செய்திகளை மறுத்த ஹரியின் செய்தித்தொடர்பாளர், இளவரசர் ஹரி மன்னர் சார்லசுக்கும் இளவரசர் வில்லியமுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முயலவில்லை என தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹரியின் பிரித்தானிய பயணம், அவரது தொண்டு நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தும் அதே நேரத்தில், தன் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் செலவிட நேரத்தை ஏற்படுத்திக்கொள்வதைக் குறித்ததாகும் என்றும் கூறியுள்ளார் அவர்.
இதற்கிடையில், அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவரும், இளவரசர் ஹரி தன் தந்தையை சந்திப்பதற்காக அரண்மனை கதவுகள் திறந்தே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |