16 மொழிகளில் இளவரசர் ஹரியின் நினைவுக் குறிப்புகள்: ராஜகுடும்பத்து உறுப்பினர்களை சங்கடப்படுத்தும்
குறித்த நூலை இளவரசர் ஹரியே வாசித்து பதிவு செய்யப்பட்ட தொகுப்பும் ஜனவரி 10ம் திகதி வெளியிடப்படுகிறது.
மன்னர் சார்லஸ் மற்றும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் உள்ளிட்ட மூத்த ராஜகுடும்பத்து உறுப்பினர்களை சங்கடப்படுத்தும்
எதிர்வரும் ஜனவரி 10ம் திகதி வெளியாகவிருக்கும் இளவரசர் ஹரியின் நினைவுக் குறிப்புகள் நூல் தொடர்பில் அவருக்கு கிடைக்கும் மொத்த தொகையையும் தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்க இருக்கிறார்.
Spare என்ற தலைப்பில் இளவரசர் ஹரி நினைவுக் குறிப்பு நூல் ஒன்றை வெளியிடவிருக்கிறார். இதன் மூலமாக பெற்ற தொகையில் 1,500,000 டொலர் அளவுக்கு Sentebale என்ற அமைப்புக்கு வழங்கவிருக்கிறார்.
@getty
இளவரசர் சீசோ உடன் இணைந்து ஹரி நிறுவிய இந்த அமைப்பானது லெசோதோ மற்றும் போட்ஸ்வானா பகுதிகளில் எச்.ஐ.வி தொற்றால் பாதிப்புக்குள்ளான சிறார்களுக்கு உதவி வருகிறது.
மேலும், சுமார் 300,000 டொலர் தொகையை WellChild என்ற அமைப்புக்கு வழங்கியுள்ளார். மொத்தம் 416 பக்கங்கள் கொண்ட Spare என்ற நூல் 28 பவுண்டுகளுக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
@getty
ஒடியோ பதிவிறக்கத்திற்கு 20 பவுண்டுகள் கட்டணமாக வசூலிக்க உள்ளனர். ஸ்பெயின் மொழி உட்பட மொத்தம் 16 மொழிகளில் குறித்த நூல் வெளியிடப்படுகிறது. மட்டுமின்றி, குறித்த நூலை இளவரசர் ஹரியே வாசித்து பதிவு செய்யப்பட்ட தொகுப்பும் ஜனவரி 10ம் திகதி வெளியிடப்படுகிறது.
இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் கண்டிப்பாக மன்னர் சார்லஸ் மற்றும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் உள்ளிட்ட மூத்த ராஜகுடும்பத்து உறுப்பினர்களை சங்கடப்படுத்தும் என்றே கூறப்படுகிறது.
@getty
மட்டுமின்றி, இந்த நூலால் இனி இளவரசர் ஹரி உடனான பிரித்தானிய ராஜகுடும்பத்தின் தொடர்புகள் துண்டிக்கப்படவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.