தாத்தா இறந்த செய்தியை சொல்ல தொலைபேசியில் அழைத்தபோது ஹரி செய்தது என்ன? வெளியாகியுள்ள புதிய தகவல்கள்
பிரித்தானியாவில் இளவரசர் பிலிப் இறந்த செய்தியை சொல்ல அமெரிக்காவில் வாழும் இளவரசர் ஹரி வீட்டுக்கு தொலைபேசியில் அழைத்தபோது, அவர் எழுந்திருக்காததால் அவர் வீட்டுக்கு அமெரிக்க பொலிசார் அனுப்பிவைக்கப்பட்டார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் இளவரசர் பிலிப் இறந்தபோது, அந்த தகவலைச் சொல்வதற்காக அமெரிக்காவில் வாழும் இளவரசர் ஹரியை தொலைபேசியில் அழைத்ததாகவும் ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஹரி வாழும் கலிபோர்னியாவுக்கும் பிரித்தானியாவுக்கும் எட்டு மணி நேர வித்தியாசம். இளவரசர் பிலிப் இறந்த செய்தி பிரித்தானியாவில் மதியம் 12 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
அப்போது கலிபோர்னியாவில் அதிகாலை மணி 4.00. அதாவது அதிகாலை 3 மணியளவில் இளவரசர் ஹரிக்கு பிரித்தானிய அரண்மனையிலிருந்து அழைப்பு வந்தபோது அவர் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார்.
அவர் தொலைபேசி அழைப்புக்கு பதில் கொடுக்காததால், அமெரிக்க பொலிசார் ஹரி வீட்டுக்கு சென்றதாகவும், அவர்கள் அவரை எழுப்பி அவரது தாத்தா இறந்த செய்தியை அறிவித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், லண்டனிலுள்ள அமெரிக்க தூதரகமோ, வாஷிங்டன் டிசியிலுள்ள பிரித்தானிய தூதரகமோ அப்படி பொலிசாருக்கு ஒரு கோரிக்கை விடுத்ததாக அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
ஆனால், அப்படி ஒரு விடயம் நடந்திருக்குமானால், மேகன் ஹரியை அழைத்துக்கொண்டு பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பிறகு, ஹரிக்கும் பிரித்தானியாவிலிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எந்த இலட்சணத்தில் உறவு இருந்திருக்கும் என்பதை கணிக்க முடிகிறது என்கிறது பிரித்தானிய ஊடகம் ஒன்று!