பிரித்தானியா மகாராணியிடம் கேட்காமலே இளவரசர் ஹரி இவ்வாறு செய்துவிட்டார்! உண்மையை உடைத்த அரண்மனை
இளவரசர் ஹரி மகளுக்கு லிலிபெட் என்று பெயர் வைப்பது குறித்து ராணியிடம் கேட்கவில்லை என அரண்மனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
இளவரசர் ஹரி-மேகன் தம்பதிக்கு கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவில் உள்ள மருத்துவமனையில் 2வது குழந்தையாக மகள் பிறந்தார்.
இளவரசர் ஹரி தன் மகளுக்கு லிலிபெட் டயானா மவுண்ட்பேட்டன் விண்ட்சர் என பெயரிட்டுள்ளார்.
லிலிபெட் பெயர் பிரித்தானியா மகாராணியின் குழந்தை பருவத்திலிருந்தே செல்ல பெயராக இருக்கிறது.
இந்நிலையில், குழந்தை பிறப்பதற்கு முன்பே ஹரி ராணியிடம் பேசியதாகவும், குழந்தைக்கு லிலிபெட் என பெயர் வைப்பது குறித்து அவரிடம் கூறியதாக ஹரி-மேகனின் நெருங்கிய வட்டாரம் தெரிவித்திருந்தது.
ஆனால், இளவரசர் ஹரி மகளுக்கு லிலிபெட் என்று பெயர் வைப்பது குறித்து ராணியிடம் கேட்கவில்லை என அரண்மனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.