வெளியேற்றப்படும் கடுமையான சூழலில் இளவரசர் ஹரி? பிரித்தானிய பிரபலம் வெளியிட்ட பகீர் பின்னணி
தமது சகோதரர் வில்லியம் உடனான உறவை சுய நாசப்படுத்தியுள்ள இளவரசர் ஹரி, தமது குடும்பத்தில் இருந்து வெளியேற்றப்படும் மிக மோசமான சூழலில் இருப்பதாக லேடி விக்டோரியா ஹெர்வி தெரிவித்துள்ளார்.
காயீன் மற்றும் ஆபேல் போன்று
திருவிவிலியத்தில் கூறப்படும் ஆதாம் - ஏவாள் தம்பதியின் இரு மகன்கள் போலவே தற்போது இளவரசர் வில்லியம் மற்றும் ஹரியின் உறவும் உள்ளது என்கிறார் லேடி விக்டோரியா ஹெர்வி.
Image: WireImage
ஆபேலின் பலிக்கு கடவுள் இரக்கம் காட்டிய பிறகு, அதனால் ஏற்பட்ட மனக்குழப்பத்தால் காயீன் தன் சகோதரனைக் கொன்றான் என்கிறது விவிலியம். இளவரசர் ஹரியும் தமது சகோதரரை துன்பப்படுத்துவதையே நோக்கமாக கொண்டுள்ளார்.
தங்களின் நெருக்கமான உறவை அவர் சுய நாசம் செய்து தற்போது காயீன் மற்றும் ஆபேல் போன்று இருவரும் மாறியுள்ளனர். ஹரியின் ஒவ்வொரு முடிவும், குடும்பத்தில் இருந்து காலாகாலத்திற்கும் வெளியேற்றப்படும் கடுமையான சூழலை அவர் நெருங்கிக்கொண்டிருக்கிறார், உண்மையில் அந்த கட்டத்தை அவர் நெருங்கிவிட்டதாகவே தாம் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார் லேடி விக்டோரியா.
தாம் பழிவாங்கப்பட்டவன் என்ற ஒரு கருத்தை முன்வைத்து ஹரி தமது குடும்பத்தை தொடர்ந்து இழுவுபடுத்தி வருகிறார். தனது நினைவுக் குறிப்புகள் நூல் வெளியான பின்னர் இதுவரை தமது சகோதரர் அல்லது தந்தையிடம் இளவரசர் ஹரி தொடர்புகொண்டதாக தகவல் இல்லை.
@getty
மோசமான சூழல் ஏற்பட்டது
அந்த நூலில் தான், இளவரசர் வில்லியம் தம்மை உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், காயங்களுடன் வெளியேறும் மோசமான சூழல் ஏற்பட்டது என அம்பலப்படுத்தியிருந்தார்.
மேகன் மெர்க்கலை சந்தித்த பின்னர் தான் தமது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டதாகவும் ஹரி அந்த நூலில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ராஜ குடும்பத்து உறுப்பினர்களும் தாமும் பேசும் மொழி ஒன்றல்ல எனவும், தமது நெருக்கமானவர்கள் தம்மை விட்டு வெகு தொலைவுக்கு சென்றுவிட்டார்கள் எனவும் ஹரி குறிப்பிட்டுள்ளார்.