மேகன் மெர்க்கலுக்கு தெரியாமல்... ஹொட்டல் அறையில் தங்கும் இளவரசர் ஹரி
கலிபோர்னியாவில் தமது குடியிருப்புக்கு அருகாமையில் அமைந்துள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் மனைவி மேகனுக்கு தெரியாமல் இளவரசர் ஹரி அடிக்கடி தங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரி தமக்கென தனியாக ஹொட்டல் அறை
கலிபோர்னியாவின் Montecito நகரில் அமைந்துள்ளது 12 மில்லியன் மதிப்பிலான ஹரி -மேகன் தம்பதியின் குடியிருப்பு. ஆனால் இந்த குடியிருப்புக்கு அருகாமையில் அமைந்துள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் இளவரசர் ஹரி தமக்கென தனியாக ஒரு அறையை பதிவு செய்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
@getty
தொடர்புடைய அறையில் மேகன் இல்லாமல் ஹரி தனியாக அடிக்கடி நேரம் செலவிடுவதாகவும் கூறப்படுகிறது. மட்டுமின்றி, வெள்ளிக்கிழமை தங்களது ஐந்தாவது திருமண நாளினை கொண்டாடியுள்ள ஹரி- மேகன் தம்பதி, இதுவரை அந்த விழாவின் புகைப்படங்களை வெளியிடவில்லை.
அத்துடன், சமீப நாட்களில் இருவரும் தனியாக நேரம் செலவிடுவதை அதிகப்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனியார் உறுப்பினர் கிளப் ஒன்றிலும் ஹரி தனக்கென ஒரு அறையை பதிவு செய்து வைத்துள்ளார்.
@getty
அந்த கிளப்பை பொறுத்தமட்டில், கடுமையான தனியுரிமைக் கொள்கையை பராமரித்து வருகின்றனர். விருந்தினர்கள் எவரும் அந்த வளாகத்தில் வைத்து எந்த கருத்தை விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விருந்தினர்கள் பயன்படுத்தும் மொபைல் போன்களில் கமெராக்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆண்டு சந்தா மட்டும் 3,200 பவுண்டுகள் என கூறுகின்றனர். ராஜ குடும்பத்தில் இருந்து வெளியேறிய பின்னர், ஹரி மற்றும் மேகன் தங்கள் தனிப்பட்ட உரிமையை பலமுறை வலியுறுத்தியுள்ளனர்.