இளவரசி டயானா குடும்பத்துடன் நெருக்கம் காட்டும் ஹரி: சில சுவாரஸ்ய தகவல்கள்
இளவரசர் ஹரி பிரித்தானியா வந்த நிலையிலும், அவரது தந்தையோ அல்லது அவரது அண்ணன் மற்றும் அண்ணியோ அவரை சந்திக்காமல் புறக்கணித்த விடயம் கவனம் ஈர்த்து வருகிறது.
பெற்ற தந்தையும், கூடப்பிறந்த அண்ணனும் புறக்கணித்த நிலையில், அவர்கள் வரவில்லையானால் என்ன, நாங்கள் இருக்கிறோம் என ஹரியின் தாயாகிய இளவரசி டயானாவின் குடும்பமே திரண்டு அவரது இன்விக்டஸ் போட்டியின் 10ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டதை உலகமே பார்த்தது.
விடயம் என்னவென்றால், இப்போது என்றில்லை, எப்போதுமே இளவரசி டயானாவின் குடும்பத்தினர் ஹரிக்கு ஆதரவாகவே நின்றுள்ளார்கள்.
எப்போதுமே கூட நிற்கும் தாயின் உறவினர்கள்
இளவரசர் ஹரியின் மகனான குட்டி இளவரசர் ஆர்ச்சி பிறந்ததுமே, அவரைப் பார்க்க முதலில் வந்தவர்களில் இளவரசி டயானாவின் சகோதரிகளில் ஒருவரான Lady Jane Fellowesம் ஒருவர் என்கிறது தி டெலிகிராப் பத்திரிகை. அதாவது, இளவரசர் வில்லியமும் கேட்டும் வரும் முன்பே இவர் குழந்தையைப் பார்க்கவந்துவிட்டாராம்.
இந்நிலையில், ஹரியும் வில்லியமும் சிறு பிள்ளைகளாக இருந்தபோது, இளவரசி டயானாவும் அவரது சகோதரிகளும் அவர்களுடன் சுற்றுலா சென்றது முதல், டயானா அகால மரணமடைந்தபோது பிள்ளைகளுடன் டயானாவின் சகோதரரான Earl Spencer கூட நின்றதைக் காட்டும் புகைப்படங்கள் வரையிலான பல்வேறு காட்சிகள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |