Bundesliga: பாயெர்ன் முனிச்சிற்கு பயத்தை காட்டிய அணி..இறுதியில் கோல் அடித்து காப்பாற்றிய ஹாரி
பண்டஸ்லிகா தொடர் போட்டியில் பாயெர்ன் முனிச் 4-3 என்ற கோல் கணக்கில் மைன்ஸ் அணியை வீழ்த்தியது.
முதல் பாதியில் பின்னடைவு
Mewa Arena மைதானத்தில் நடந்த போட்டியில் பாயெர்ன் முனிச், மைன்ஸ் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் மைன்ஸ் அணியின் டொமினிக் கோர் கோல் அடித்தார். 29வது நிமிடத்தில் சக வீரர் பவுல் நெபெல் கோல் அடித்து பாயெர்ன் முனிச் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அதிலிருந்து பாயெர்ன் அணி மீள்வதற்குள் 45+2வது நிமிடத்தில் ஷெரால்டோ பேக்கர் கோல் அடிக்க, முதல் பாதியில் மைன்ஸ் (Mainz) அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
ஹாரி கேன் அபாரம்
ஆனால், இரண்டாம் பாதியில் பாயெர்ன் அணியின் கை ஓங்க ஆட்டம் தலைகீழாக மாறியது.
பாயெர்ன் முனிச் வீரர் நிக்கோலஸ் ஜேக்ஸன் 53வது நிமிடத்திலும், மைக்கேல் ஓலிஸ் 73வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
அடுத்த 7வது நிமிடத்தில் இளம் வீரர் ஜமால் மியூசியலா (Jamal Musiala) அசத்தலாக கோல் அடித்து எதிரணி பதிலடி கொடுத்தார்.
பாயெர்னின் நட்சத்திர வீரர் ஹாரி கேன் (Harry Kane) 83வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலினை அடித்தார். இறுதியில் பாயெர்ன் அணி 4-3 என்ற கோல் கணக்கில் மைன்ஸ் அணியை வீழ்த்தியது.



| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |