அந்தரத்தில் டைவ் அடித்து தலையால் முட்டி கோல்! 60 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜாம்பவான்
பாயர்ன் முனிச் அணிக்காக கோல் அடித்ததன் மூலம் ஹாரி கேன் 60 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.
ஹாரி கேன்
பண்டஸ்லிகா தொடரின் நேற்றையப் போட்டியில் பாயர்ன் முனிச் (Bayern Munich) மற்றும் டர்ம்ஸ்டட் (Darmstadt) அணிகள் மோதின.
பரபரப்பாக தொடங்கிய இப்போட்டியில் டர்ம்ஸ்டட் அணி வீரர் டிம் ஸ்கர்க்கே 28வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
அதற்கு பதிலடியாக பாயர்ன் வீரர் ஜமால் முசியாலா (Jamal Musiala) மிரட்டலாக கோல் (36வது நிமிடம்) அடித்தார்.
Kane ? Musiala
— FC Bayern Munich (@FCBayernEN) March 16, 2024
Goalscorers pic.twitter.com/5vJ62nidnM
அதனைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் ஹாரி கேன் (Harry Kane) அந்தரத்தில் டைவ் செய்து தலையால் முட்டி கோல் அடித்தார்.
அபார வெற்றி
இரண்டாம் பாதியின் 64வது நிமிடத்தில் முசியாலா 5 பேரை கடந்து அபாரமாக இரண்டாவது கோல் அடித்தார்.
அடுத்து செர்கே ஞப்ரே (Serge Gnabry) 74வது நிமிடத்திலும், மெதிஸ் டெல் 90+3வது நிமிடத்திலும் பாயர்ன் முனிச் அணிக்காக கோல்கள் அடித்தனர்.
90+5வது நிமிடத்தில் டர்ம்ஸ்டட் அணி வீரர் ஆஸ்கார் கோல் அடித்தாலும், பாயர்ன் முனிச் அணி 5-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ஹாரி கேன் அடித்த கோல் மூலம், ஜேர்மனிய ஜாம்பவான் உவெ சீலரின் 60 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.
Proud to break a Bundesliga record but more importantly another good win. ? pic.twitter.com/Nlr1lPL870
— Harry Kane (@HKane) March 16, 2024
அதாவது 1963-64 சீசனில் சீலர் ஹாம்பர்க் அணிக்காக 30 கோல்கள் அடித்திருந்தார். ஆனால் ஹாரி கேன் 26 போட்டிகளில் 31 கோல்கள் அடித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |