சாலை விபத்தில் சிக்கிய ஹரி கேனின் மூன்று பிள்ளைகள்: ஜேர்மனியில் சம்பவம்
இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைவரும் பேயர்ன் முனிச் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவருமான ஹரி கேனின் பிள்ளைகள் மூவர் சாலை விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரி கேன் லண்டனுக்கு
இதனையடுத்து மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் பங்கெடுக்கும் பொருட்டு ஹரி கேன் லண்டனுக்கு திரும்பிய நாளில் இந்த விபத்து நடந்துள்ளது.
முனிச் அருகே உள்ள பவேரியாவில் திங்கள்கிழமை மாலை 5.15 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளது. அதே வேளை ஹரி கேன் இங்கிலாந்தில் தரையிறங்கியுள்ளார். ஹரி கேன் பிள்ளைகள் பயணித்த வாகனத்தை 20 வயதான சாரதி ஒருவர் மோதியதாக கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கி
இந்த நிலையில் ஹரி கேனின் நான்கு பிள்ளைகளில் மூவர் அந்த விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் எவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவத்தின் போது ஹரி கேனின் மனைவியும் அவர்களது 7 மாத குழந்தையும் வாகனத்தில் இருந்திருக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |