ரொனால்டோ, மெஸ்ஸியின் சாதனையில் நட்சத்திரம்! 95 ஆண்டுகளில் முதல் இங்கிலாந்து வீரர்
ஒரே சீஸனில் 50 கிளப் கோல்கள் அடித்த ஜாம்பவான்கள் பட்டியலில் இங்கிலாந்தின் ஹாரி கேன் இணைந்துள்ளார்.
ஹாரி கேன்
ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டியில் பாயெர்ன் முனிச் அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி கேன் (Harry Kane) பாயெர்ன் முனிச் அணிக்காக கோல் அடித்தார்.
இதன்மூலம் 95 ஆண்டுகால வரலாற்றில், ஒரே சீஸனில் 50 கோல்கள் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஹாரி கேன் படைத்தார்.
இதற்கு முன்பாக, 1930-31 சீஸனில் டாம் வாரிங் (Tom Waring) இந்த சாதனையை ஆஸ்டன் வில்லா அணிக்காக படைத்திருந்தார்.
50 கிளப் கோல்கள் அடித்த சாதனைப் பட்டியலில் லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்ட சில ஜாம்பவான்களுடன் ஹாரி கேன் இணைந்துள்ளார்.

ஒரே சீஸனில் 50 கிளப் கோல்கள் அடித்தவர்கள்:
- கிறிஸ்டியானோ ரொனால்டோ - ரியல் மாட்ரிட் (6 சீஸன்கள்)
- லியோனல் மெஸ்ஸி - பார்சிலோனா (6 சீஸன்கள்)
- ஹாரி கேன் - பாயெர்ன் முனிச் (2025/26 சீஸன்)
- லூயிஸ் சுவாரெஸ் - பார்சிலோனா (2015/16 சீஸன்)
- ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி - பாயெர்ன் முனிச் (2019/20 மற்றும் 2021-22)
- எர்லிங் ஹாலண்ட் - மான்செஸ்டர் சிட்டி (2022-23)

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |