அந்தரத்தில் பறந்து தலையால் முட்டி கோல்! தெறிக்கவிட்ட இங்கிலாந்து லெஜண்ட்
சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பாயெர்ன் முனிச் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
தலையால் முட்டி கோல்
UEFA சாம்பியன்ஸ் லீக் தொடரின் நேற்றையப் போட்டியில் பாயெர்ன் முனிச் மற்றும் லெவேர்குசென் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் பாயெர்ன் அணியின் நட்சத்திர வீரர் ஹாரி கேன் (இங்கிலாந்து), உயர தாவி தலையால் முட்டி கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து, 54வது நிமிடத்தில் பாயெர்ன் முனிச்சின் கிம்மிக் பாஸ் செய்த பந்தை, எதிரணி கோல் கீப்பர் முயன்று தவறவிட்டார்.
முசியாலா கோல்
அப்போது விரைந்து செயல்பட்ட இளம் வீரர் முசியாலா பந்தை வலைக்குள் தள்ளி, தமது அணிக்கு இரண்டாவது கோலினை பெற்றுத்தந்தார்.
பின்னர் ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் பாயெர்ன் முனிச் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஹாரி கேன் (Harry Kane) அபாரமாக கோல் அடித்தார்.
கடைசிவரை லெவேர்குசென் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாததால், பாயெர்ன் முனிச் (Bayern Munich) 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |