கத்தாரில் முற்றிலும் அழிக்கப்பட்டது! உலகக்கோப்பை தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன் வேதனை
உலகக்கோப்பை தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹரி கேன் வேதனை தெரிவித்தார்.
பெனால்டியை தவறவிட்ட ஹரி
கத்தாரில் நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியது. ஆனால், பிரான்ஸிடம் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து தோல்வியுற்றதால் வேதனையுடன் தொடரை விட்டு வெளியேறியது.
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹரி கேன் தனக்கு கிடைத்த இரண்டாவது பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்ற தவறவிட்டது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.
@AP
வேதனைப் பதிவு
இந்த நிலையில், உலகக்கோப்பை கனவு முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டதாக ஹரி கேன் வேதனையுடன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
@HARRY KANE/TWITTER
அவரது பதிவில், 'முற்றிலும் அழிக்கப்பட்டது. நாங்கள் எல்லாவற்றையும் கொடுத்துள்ளோம், அது ஒரு சிறிய விவரத்திற்கு வந்துள்ளது. அதற்கு நான் பொறுப்பேற்கிறேன். அதில் இருந்து எந்தத் தகவலும் இல்லை, அது காயப்படுத்தியது மற்றும் அதைக் கடக்க சிறிது நேரம் எடுக்கும், ஆனால் அது விளையாட்டின் ஒரு பகுதி தான்.
இப்போது இந்த அனுபவத்தைக் கொண்டு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அடுத்த சவாலுக்கு வலிமையாக்கிக் கொள்ள வேண்டும். இந்த தொடர் முழுவதும் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி - இது நிறைய அர்த்தங்களை கொண்டுள்ளது' என பதிவிட்டுள்ளார்.