இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்த அணி! கேப்டனின் உருக்கமான பதிவு
ஐரோப்பிய கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில் வட மெசிடோனியா அணி டிரா செய்து இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது.
எனிஸ் பார்டி கோல்
Tose Proeski Arena மைதானத்தில் நடந்த யூரோ கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் வட மெசிடோனியா அணிகள் மோதின.
தரவரிசையில் 66வது இடத்தில் இருக்கும் வட மெசிடோனியாவை, 4வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து எளிதில் வீழ்த்தி விடும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
Getty
இங்கிலாந்து கேப்டன் ஹரிகேனும் முதல் பாதியில் களமிறக்கப்படவில்லை. ஆனால் ஆட்டத்தின் 41வது நிமிடத்தில் வட மெசிடோனிய வீரர் எனிஸ் பார்டி (Enis Bardhi) இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இங்கிலாந்து வீரர் ரிகோ லீவிஸ் (Rico Lewis) பந்தை தலையால் முட்டும்போது, எதிரணியின் போஜன் மியோவ்ஸ்கியின் (Bojan Miovski) முகத்தில் கையால் தாக்கினார். இதனால் வட மெசிடோனியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
Reuters
அதனைத் தொடர்ந்து எனிஸ் பார்டி வலையை நோக்கி ஷாட் அடிக்க, கோல் கீப்பர் பிக்போர்ட் (Pickford) அபாரமாக தடுத்தார். ஆனால் திரும்ப வந்த பந்தை பார்டி கோலாக மாற்றினார்.
இந்த கோல் இங்கிலாந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பின்னரான இரண்டாம் பாதியில் கிரீலீஸ் மூலமாக கிடைத்த கோல் ஆஃசைடு என அறிவிக்கப்பட்டது.
Own கோல்
இந்த நிலையில் கேப்டன் ஹரி கேன் களமிறங்கினார். ஆட்டத்தின் 59வது நிமிடத்தில், இங்கிலாந்தின் கார்னர் கிக்கில் இருந்து வந்த பந்தை, வட மெசிடோனியா வீரர் ஜனி அடனசோவ் தலையால் முட்டி தடுக்க முயற்சிக்க அது Own கோலாக மாறியது. இதனால் ஆட்டம் 1-1 என சமநிலை அடைந்தது.
அதன் பின்னர் மெசிடோனிய வீரர்கள் கடுமையாக போராடி இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்ததால் போட்டி டிராவில் முடிந்தது.
இந்தப் போட்டி குறித்து கேப்டன் ஹரி கேன் வெளியிட்ட பதிவில், 'நாங்கள் விரும்புவது வெற்றி அல்ல, தோற்கடிக்கப்படாத தகுதிச்சுற்று மற்றும் குழுவில் முதலிடத்தைத் தான். கோடையில் யூரோக்களை கொண்டு வாருங்கள்! அனைத்து ஆதரவுக்கும் நன்றி' என உருக்கமாக கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் 6 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருந்தாலும், இத்தாலி மற்றும் உக்ரைன் அணிகளுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளதால், தகுதிச்சுற்றில் இந்த டிரா அந்த அணிக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
(Nick Potts/PA) (PA Wire)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |