விரைவில் மாற்ற முயற்சிக்கிறேன்: முதல் போட்டியே தோல்வியடைந்தது குறித்து ஹரி கேன் கருத்து
பாயர்ன் முனிச்சில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே தோல்வியடைந்தது குறித்து ஹரி கேன் கருத்து தெரிவித்துள்ளார்.
இறுதிப் போட்டி
இங்கிலாந்து கேப்டன் ஹரி கேன் ஜேர்மனியின் பாயர்ன் முனிச் அணியில் இணைந்த பின்னர், முதல் போட்டியே DFL-சூப்பர்கப் தொடரின் இறுதிப்போட்டியில் களமிறங்கினார்.
RB Leipzig அணி இந்தப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் பாயர்ன் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
ஹரி கேன் களமிறங்கிய முதல் போட்டியே தோல்வி அடைந்ததுடன், கோப்பையையும் பறிகொடுத்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
Stefan Matzke/Sampics/Corbis/Getty Images
ஹரி கேன் கருத்து
இந்நிலையில் ஹரி கேன் போட்டி குறித்து கூறுகையில், 'நான் என் முழு வாழ்க்கையையும் இங்கிலாந்து மற்றும் பிரீமியர் லீக்கில் கழித்தேன். நான் ஒரு புதிய லீக் மற்றும் ஒரு புதிய அணியுடன் பழக வேண்டும்.
இந்த லீக்கில் சில சிறந்த அணிகள் உள்ளன. பாயர்ன் சாம்பியனாக வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் எதிரணியினர் சிறப்பாக வருகிறார்கள். இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. கூடிய விரைவில் மாற்ற முயற்சிக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
Christian Kaspar-Bartke/Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |